Tamil Serial Bharathi Kannamma Rating Update With promo : கதை எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியாமல் ஓடும் சீரியல் இது ஒன்றுதான் என்று கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல்.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே யாரும் இருக்க கூடாது அப்படி இருந்தால் தம்பதியின் வாழக்கை எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த பாரதி கண்ணம்மா. காதலித்து திருமணம் செய்துகொண்ட கண்ணம்மாவை தோழியின் பேச்சை கேட்டு கைவிட்ட பாரதி வருடங்கள கடந்தாலும் இன்னும் அதே கோபத்துடன் இருக்கிறான்.
மறுபுறம் அவனை தூண்டிவிட்டு கண்ணம்மாவை கைவிட வைத்த வெண்பா செய்த தவறுகள் அனைத்தையும் மன்னித்து நட்பை தொடர்கிறான். இதில் வெண்பா பாரதியை திருமணம் செய்துகொள்ள பலமுறை முயற்சித்தும் இது நடக்காமல் போனது. இதில் ஒருசிலமுறை பாரதியும் வெண்பாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொல்லியிருக்கிறார்
இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், தனக்கு குழந்தை பிறக்கும் பாக்கியம் இல்லை என்று வெண்பா சொன்னதை கேட்டு மனைவியை பிரிந்த பாரதி, இந்த பிரச்சினை தெரிந்தும் வெண்பா ஏன் தன்தை திருமணம் செய்துகொள்ள ஆசைபபடுகிறாள் என்று யோசிக்காமல் இருக்கிறான். அப்படி யோசித்தால் தான் கதை முடிந்துவிடுமே.
இப்படியோ போய்க்கொண்டிருக்க தற்போது வெண்பாவின் அம்மா வெளிநாட்டில் இருந்து வந்துவிட்டார். அவர் பாரதி இனி உன்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டான் என்று சொல்லி மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தொடங்கி ரோகித் என்ற ஒரு மாப்பிள்ளை கூட ஃபிக்ஸ் செய்துவிட்டார். இப்போதெல்லாம் வெண்பா அவருடன்தான் சுற்றிக்கொண்டிருக்கிறாள்
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வெண்பாவின் மாப்பிள்ளை வந்தபிறகு பாரதிக்கே பெரிதாக வேலை இல்லை. மேலும் இந்த சீரியலின் கதை பாரதி கண்ணம்மாவை நோக்கி நகர்கிறதா? அல்லது வெண்பாவின் திருமணத்தை நோக்கி நகர்கிறதா என்பதை இயக்குநர் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
பொதுவாக சீரியல் என்பது கொஞ்சம் இழுத்து சொல்லும் திரைக்கதையுடன் இருப்பது இயல்புதான் என்றாலும் பாரதி கண்ணம்மா கொஞ்சம் ஒவராக இழுத்துக்கொண்டு வருகிறார்கள். இடையில் சென்னையில் ஒருநாள் சீனை சின்னத்திரையில் ரீமேக் செய்துள்ளனர். கதையை ஒரே நேர்கோட்டில் கொண்டுசெல்லாமல் எதை நோக்கி சீரியல் சென்றுகொண்டிருக்கிறது என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
இதனிடையே வெண்பாவும் ரோகித்தும் காரில் வந்துகொண்டிருக்கும்போது நடு ரோட்டில் அடிப்பட்ட ஒருவரை ஹாஸ்பிட்டலில் சேர்க்கின்றனர். அப்போது அங்கு வரும் பாரதி கண்ணம்மா இருவரிடமும் இதுதான் என் மனைவி என்று வெண்பாவை ரோகித் அறிமுகப்படுத்துகிறார். இதை கேட்டு கண்ணம்மா மகிழ்ச்சியில் திளை்ககிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
இதில் வெண்பாவை தனது மனைவி என்று ரோகித் சொன்னதற்கு கண்ணம்மா எதற்காக இப்படி சிரித்தார் என்பதுதான் புரியாத புதிர். எப்படி இருந்தாலும் பாரதி உண்மையை கண்டுபிடிக்க போவதில்லை. கண்ணம்மாவுடன் சேரப்போவதும் இல்லை அப்புறம் எதற்காக இந்த சந்தோஷம் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.