சர்வதேச நிதியத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி| Dinamalar

வாஷிங்டன்:சர்வதேச நிதியத்தின் ஆசிய – பசிபிக் மண்டல இயக்குனராக இந்திய பொருளாதார நிபுணர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா வெளியிட்டு உள்ள அறிக்கை:சர்வதேச நிதியத்தின் ஆசிய – பசிபிக் மண்டல துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், அதன் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். இம்மாதம் 22ல் அவர் இந்தப்பதவியை ஏற்பார்.

இந்தியரான கிருஷ்ணா ஸ்ரீநிவாசன், சர்வதேச நிதித்துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். நிதியத்தின் முக்கியமான காலகட்டங்களில் எங்களுடன் இணைந்து பணியாற்றியவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.