சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை கேட்ட இளைஞர் அடித்துக் கொலை

கும்பகோணம் அருகே,  சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை தட்டிக் கேட்ட இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தன் நண்பர் சந்தோஷூடன், பழவியாபாரி பிரகாஷ் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது முன்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் புகைத்த சிகரெட் சாம்பல் இருவரின் மீது பட்டதாகவும், அதுகுறித்து அந்த நபரை நிறுத்தி இருவரும் அதட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

தன் நண்பர்களை வரவழைத்த நபர், சந்தோஷ் மற்றும் பிரகாஷை கடுமையாக தாக்கியதாகவும், அதில் பிரகாஷ் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. சந்தோஷ் அளித்த புகாரில் 6 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.