உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றான சீனாவில் மீண்டும் கொரோனா காரணமாக புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சீனாவின் முக்கிய பொருளாதார நகரங்களாக ஷாங்காய் மற்றும் பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!
இந்த நிலையில் சமீபத்திய நாட்களாகவே தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
புதிய கட்டுபாடுகள்
உலகளவில் சீனா மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்களில் ஒன்றாகும். தற்போது சீனாவில் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தேவை சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
எண்ணெய் விலை சரிவு
மேக்தா ஈக்விட்டி லிமிடெட், கச்சா எண்ணெய் விலையானது 3 மாத உச்சத்தில் இருந்து சரிவினைக் கண்டுள்ளது. இருப்பினும் அமெரிக்காவில் கோடைக்காலத்தில் பெட்ரோல் தேவை தொடர்ந்து விலையை ஆதரிக்கிறது. பிரண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 122 டாலராகும், டபள்யூ டி ஐ கச்சா எண்ணெய் விலையானது 120.99 டாலராகவும் சரிவினைக் காணப்படுகிறது.
சரிவு தொடருமா?
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை வலுவாக இருந்து வரும் நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை வலுவாக காணப்படுகின்றது. இந்த நிலையில் இது மேற்கொண்டு விலையில் தாக்கம் இருக்குமா? இந்த விலை குறைவானது இப்படியே தொடருமா? ஏனெனில் உச்சத்தில் இருந்து விலை குறைந்திருந்தாலும் மீண்டும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
இந்தியாவில் விலை குறையுமா?
சீனாவினை அடுத்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவில், விலை குறையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் கச்சா எண்ணெய் விலையானது கடந்த அமர்வினை காட்டிலும் சற்று குறைந்திருந்தாலும், மீண்டும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. தொடர்ந்து தேவையும் அதிகரித்து வருகின்றது. பல காரணிகளும் சற்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
Crude oil prices struggling amid china imposes fresh covid restrictions
New restrictions are said to have been put in place again due to the corona in China.