உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் பெருமை கொள்ளும் ஒரு விஷயம் மட்டும் அல்லாமல் பல கோடி இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை-க்கு இன்று 50வது பிறந் தான்.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க்-ன் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்ட போது, சென்னையின் பல கல்வி நிறுவனங்கள் சுந்தர் பிச்சை தங்கள் பள்ளியில் படித்தவர் என்று சொந்தம் கொண்டாடினர்.
என்ன நடந்ததது தெரியுமா..? சுந்தர் பிச்சை உண்மையில் சென்னையில் 2 பள்ளியில் படித்துள்ளார்.
இந்தியாவுக்கு சபாஷ் சொன்ன ஃபிட்ச்.. நெகட்டிவில் இருந்து ஸ்டேபிள்.. செம்ம அப்டேட்!
சுந்தர் பிச்சை
தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் CEO-வாக அறிவிக்கப்பட்ட முதல் ஒரே வாரத்தில் மட்டும் அவருடைய விக்கிபீடியா பக்கத்தில் பள்ளி விபரங்களில் குறித்து மட்டும் சுமார் 350 திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி தலைவர் மனு குமார் ஜெயின்
உலகின் மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓ தங்கள் பள்ளியில் பிடித்துள்ளார் என்பது தனி அந்தஸ்து என்பது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய விளம்பரம். சமீபத்தில் சியோமி தலைவர் மனு குமார் ஜெயின் படித்த பள்ளியில் விளம்பர பலகையில் அவருடைய போட்டோ போட்டப்பட்டது. இதை பெருமையாக தனது லிங்கிடுஇன் தளத்தில் மனு குமார் ஜெயின் பதிவிட்டார்.
சுந்தரராஜன் பிச்சை Aka சுந்தர் பிச்சை
சுந்தரராஜன் பிச்சை என்கிற சுந்தர் பிச்சை-யின் கல்லூரி பிடிப்பு குறித்து அவருடைய லின்கிடுஇன் மற்றும் பிற தளத்தில் தெளிவாக இருந்தாலும், பள்ளி கல்வி குறிக்த விபரங்கள் இல்லாதது தான் விக்கிபீடியா பக்கத்தில் 350 திருத்தங்கள் செய்யப்பட முக்கியக் காரணம். இந்தக் குழப்பத்தைச் சுந்தர் பிச்சையே தீர்த்து வைத்துள்ளார்.
இண்டர்வியூவ்
ஸ்டான்போர்ட் பிசினஸில் கல்லூரியில் நடந்த ஒரு இண்டர்வியூவில் தான் படித்த பள்ளி விபரம் குறித்தும், 350 விக்கிப்பீடியா திருத்தங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்வி உலகும் முழுவதும் இருக்கும் தமிழர்கள் மத்தியில் பிரபலமானது.
2 பள்ளிகள்
இந்த கேள்விக்கு வெட்கப்பட்டுக் கொண்டே விக்கிபீடியாவில் வந்த பெயர்களில் இரண்டு பெயர்கள் சரியானவை என்று கூறிய சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகரில் இருக்கும் ஜவஹர் வித்யாலயா சீனியர் செக்கண்டரி பள்ளி மற்றும் சென்னையில் உள்ள வன வாணி பள்ளிகளில் தனது பள்ளிக் கல்வியை முடித்ததாகவும் கூறினார். இதில் வன வாணி பள்ளி ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Why sundar pichai school details were edited 350 times in wikipedia?
Why sundar pichai school details were edited 350 times in wikipedia? சுந்தர் பிச்சை-காக அடித்துக்கொண்ட சென்னை பள்ளிகள்.. ஏன் தெரியுமா..?! #HBD #SundarPichai