டெல்லி,
டெல்லியில் சுமாா் 2 கோடிக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு ஒருநாளைக்கு சுமாா் 1200 மில்லியன் லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது.
டெல்லி குடிநீா் வாாியம் மூலம் 950 மில்லியன் லிட்டா் நீா் விநியோகிக்கப்படுகிறது. அாியானாவில் இருந்து 610 மில்லியன் நீர் 2 கால்வாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. யமுனா ஆற்றில் இருந்து 65 மில்லியன் லிட்டா் நீா் டெல்லிக்கு அளிக்கப்படுகிறது.
இ்ந்த நிலையில் டெல்லியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் வினியோகம் பாதிக்கப்படும் என குடிநீா் வாாிய அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.
இது தொடா்பாக அதிகாாி கூறுகையில், டெல்லியில் உள்ள வசிராபாத் குளம் 674.5 அடி கொள்ளவை கொண்டது. அதில் தற்போது 668.7 அடிவரை மட்டுமே நீா் உள்ளது. அாியானாவின் கோியா் லைன் கால்வாய் மற்றும் டெல்லியின் துணை கால்வாய் மூலம் வரும் நீரானது ஏற்ற இறக்கமாக உள்ளது.
ஹைதர்பூர் அலகு 1 மற்றும் 2 , பவானா, நங்லோய், துவாரகா ஆகிய கால்வாய்களில் மிதக்கும் பொருட்களால் நீா் வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. வஜிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா ஆகிய குடிநீா் சுத்திகாிப்பு நிலையங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. அவை சாிசெய்யப்படும் வரை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.
டெல்லியின் வடக்கு ,வடமேற்கு, மத்திய டெல்லி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீா் கிடைக்கும். என அவா் தொிவித்தாா்.