திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே, தமிழக அரசு பேருந்து ஒட்டிக்கொண்டிருந்த ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சுதாரித்துக்கொண்ட ஓட்டுனர் பேருந்தை ஓரமாக நிறுத்தி, நடக்க விபத்தை தடுத்து நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.
தேனியிலிருந்து அரசு பேருந்து ஒன்று திண்டுக்கல்லை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, ஓட்டுநர் பாஸ்கரனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனால் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கேயே மயங்கி பாஸ்கரன் சரிந்தார். இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநர் பாஸ்கரனனை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெஞ்சு வலி ஏற்பட்ட போது பயணிகளின் உயிரை மனதில் வைத்துக்கொண்டு, சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் பாஸ்கரனுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.