இந்தியாவில் தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள் 50, 100, 200 நாட்கள் என வெற்றிகரமாக தொடர்ந்து ஓடிய காலம் போய் தற்போது முதல் மூன்று நாட்களோ, ரிலீசான முதல் வாரமோ அந்த படம் நன்றாக ஓடிவிட்டால் போதும் அது ஆட்டோமேட்டிக்காக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்டில் சேர்ந்துவிடும்.
முன்பெல்லாம் ஒரு படத்தின் ரிசல்ட்டை விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியில் நல்ல படமா இல்லையா என்பதை கணக்கிடுவார்கள். ஆனால் இந்த பாக்ஸ் ஆபிஸ் ஹிட் உலகில் வசூல் கணக்கீடுதான் முன்னணியில் இருக்கிறது என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக பெரிய ஸ்டார்களின் படங்கள் வந்துவிட்டால் போதும் முதல் 3 நாள் வசூல் என்ன? முதல் வாரம் வசூல் என்ன? அது அந்த ஹீரோவின் முந்தைய படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்ததா? மற்ற ஹீரோக்களின் வசூல் சாதனையை ரிலீசான ஹீரோவின் படம் முறியடித்ததா? போன்ற போட்டிகள் சூழ் உலகாகவே ட்விட்டர் போன்ற தளங்கள் மாறியிருக்கின்றன.
இதுப்போன்ற வசூல் விவரங்களை வெளியிடுவதற்காகவே நொடிப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருக்கிறார்கள் மூவி ட்ராக்கர்கள். இதனால் ரசிகர்களிடையே எங்க ஹீரோவோட படம் தான் செம்ம ஹிட் 100 கொடிக்கு மேல வசூலாகிருச்சு இனி இத எப்டி ஃப்ளாப்புனு சொல்ல முடியும் என்ற தர்க்கங்கள் அரங்கேறுகிறது.
ALSO READ: ஆதாரமில்லாமல் அவதூறு வீடியோ போடுவதா? – பயில்வான் ரங்கநாதனால் கொதித்துப்போன சுசித்ரா!
இந்த வார்த்தை போர் இந்தியாவின் அனைத்து Cinema wood களிலும் தொடர்ந்து வருகிறது. பொழுதுபோக்கிற்கு அடுத்தபடியாக சினிமாத்துறை வியாபாரமாக பார்க்கப்பட்டாலும் ஒருகட்டத்தில் அவை போட்டியை தாண்டி பொறாமைக்களமாக மாறிவிடுமோ என்ற ஐயப்பாட்டையும், அச்சத்தையும் கொடுப்பதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கையில், திரைப்படங்களுக்கு கிடைக்கும் கலெக்ஷன்ஸ் குறித்து நடிகர் ஷாருக்கான் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட All India Bakchod Podcast நிகழ்ச்சியில் பேசியுள்ள ஷாருக்கான், “என்னை பற்றி தாராளமாக criticize பன்னுங்க. அதுல எந்த பிரச்னையும் இல்லை.. ஆனால் Girls, Guys & எல்லாருக்கும் சொல்றது ஒன்னே ஒன்னுதான். தயவு செஞ்சு படத்தோடு கலக்ஷன் பத்தி எனக்கு அனுப்பாதீங்க. நான் தான் படமே எடுக்குறேன். நான் தயாரிச்சு, வெளியிடுறேன். அந்த படத்தோட உண்மையான கலெக்ஷன் எனக்கு நல்லாவே தெரியும். ” என அவருக்கே உரிய துணுக்கலான பாணியில் கூறியிருந்தார்.
ஷாருக் கான் பேசியிருந்த வீடியோவை காண : இதை க்ளிக் செய்க
அந்த வீடியோதான் 1.50 லட்சத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டு ட்விட்டரில் படு வைரலாகி வருகிறது. இதனை ஷேர் செய்த நெட்டிசன்கள் எத்தனை ஹிட், ஃப்ளாப் படங்களை கொடுத்தாலும் பாலிவுட்டுக்கு பாட்ஷா ஷாருக்கான்தான் என பதிவிட்டிருக்கிறார்கள்.
இது இந்தி மட்டுமல்ல, இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கும் பொருந்தும் என ட்வீட்டியிருக்கிறார்கள். இதுபோக, திரைப்படங்கள் வசூல் ரீதியாக ஹிட்டாச்சா இல்லையா என்பதை காட்டிலும் அந்த படத்தினால் ஏற்பட்ட தாக்கம் என்ன என்பது குறித்து ஆரோக்கியமாக விவாதிக்கலாம் என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.
ALSO READ: