சென்னை: தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் செய்யபட்டு வருகின்றனர். பள்ளிகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே விநியோகிக்கப்படுகின்றனர். கோடை விடுமுறை முடிந்து 1-10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.