நேற்று திருமணம் செய்துகொண்ட நயன்தாரா விக்கேஷ் சிவன் புதுமண தம்பதியினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் 150 பேருக்கு மேல் அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட காரணங்களால் அங்கு திருமணம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், நேற்று திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதியர் இன்று திருப்பதியில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நண்பகல் 12 மணிக்கு நாள்தோறும் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM