நயன்தாரா திருமணப் புடவை: கோயில்களின் சிற்ப டிசைன்கள்;மணமக்கள் உடைகளுக்குப் பின் இவ்வளவு பெரிய கதையா?

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு நேற்றைய தினம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. திருமணத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வெளிநபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் திருமணத்திற்கு பிறகு சில மணி நேரங்களில் விக்னேஷ் சிவன் தன் சமூக வலைதளப் பக்கங்களில் திருமண புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில் மணமக்களின் திருமண உடைகள் மிகவும் ஆடம்பரமாகவும் தனித்துவமாகவும் காட்சியளித்தன. திருமண உடைகள் புகழ்பெற்ற ஜேட் குழுமத்தால் இருவரின் விருப்பப்படி தனித்துவமாய் வடிவமைக்கப்பட்டன. நடிகை நயன்தாரா சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார். நவீன காலத்திற்கும் ஏற்றவாறு பாரம்பரிய மணம் சற்றும் குறையாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது அப்புடவை. பார்டர்களில் ‌வரலாற்று சிறப்புமிக்க கொய்சாலா கோவிலின் கட்டிடங்கள் அச்சிடப்பட்டிருந்தது.

Nayanthara – Vignesh Shivn

திருமண ஆடை குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியபோதே நயன்தாரா பாரம்பரிய சுவையுடன் கூடிய நவீன மயமான உடை அணியவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தாராம். பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, ஜேட் குழுமத்தின் டிசைனர் மோனிஷா ஷாவிடம் பழங்கால கோயில்களின் கட்டிடக்கலை சாராம்சங்களைத் தழுவி திருமண ஆடை வடிவமைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். நயன்தாராவின் விருப்பத்திற்கேற்ப சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்ற கொய்சாலா கோயில்களைப் பற்றி கூறினார் மோனிகா. இந்த பாரம்பரிய சிறப்பு மிக்க கோயில்களின் சிற்பங்கள்தான் நயன்தாராவின் சிவப்பு நிற திருமண உடையில் எம்ராய்டரியாக போடப்பட்டிருக்கிறது. அவை பல மணி நேர வேலைப்பாடுகள் மற்றும் உன்னிப்பான கைவினைத்திறனால் உருவாக்கப்பட்டுள்ளன.

நயன்தாரா லெஹங்காமீது புடவை அணிவது போன்ற ஆடை வகைகளில் பிரியமாக இருப்பவர். மோனிகா புடவையின் பல்லுவில் அலை அலையாய் இருப்பதுபோல் வடிவமைத்துள்ளார். மிக நீளமான பல்லு, சிவப்பு நிற நெட் துணியில் ஆன வெய்யில் (மகளிர் திருமணத்தின் போது அணியும் முக்காடு) ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. இந்த ஆடை உடுத்துவதற்கு ஏற்ப மிகவும் குறைவான எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்து புராணங்களின்படி லக்ஷ்மி தெய்வம் அதிர்ஷ்டத்தையும் வளத்தையும் குறிக்கிறது. எனவே மணமக்களின் உடைகளில் கைகளைச் சுற்றி லட்சுமியின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒற்றுமை,அர்ப்பணிப்பு மற்றும் பரஸ்பர மரியாதையை குறிக்கும் வகையில் மணமக்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

Nayanthara – Vignesh Shivn

மணமகன் விக்னேஷ் சிவன் வேஷ்டி குர்த்தி மற்றும் சால்வை ஒன்றை அணிந்திருந்தார். இவரின் ஆடையும் ஜேட் குழுமத்தால் வடிவமைக்கப்பட்டவைதான்.எம்ப்ராய்டரி டிசைனால் அலங்கரிக்கப்பட்ட சால்வை இவரது ஆடைக்கு மேலும் அழகை கூட்டியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.