வெலிங்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ஜூன் 2ம் தேதி முதல் ஜூன் 06ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கேன் வில்லியம்சனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக டாம் லேதம் அணியை வழி நடத்துவார் என்று கூறப்படுகிறது.