பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், அவை மீட்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.
முஷாரப் நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். “குடும்பத்தினரின் செய்தி: அவர் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது உடல்நலக்குறைவு (அமிலாய்டோசிஸ்) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு சாத்தியமில்லாத மற்றும் உறுப்புகள் செயலிழந்த கடினமான கட்டத்தில் அவர் இருக்கிறார். அவர் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள். ” என்று ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Message from Family:
He is not on the ventilator. Has been hospitalized for the last 3 weeks due to a complication of his ailment (Amyloidosis). Going through a difficult stage where recovery is not possible and organs are malfunctioning. Pray for ease in his daily living. pic.twitter.com/xuFIdhFOnc
— Pervez Musharraf (@P_Musharraf) June 10, 2022
முன்னதாக, சில பாகிஸ்தான் ஊடகங்கள் முஷாரப் மருத்துவமனையில் காலமானார் என்று முன்னர் செய்தி வெளியிட்டன. ஆனால் அந்த அறிக்கைகள் பின்னர் வாபஸ் பெறப்பட்டன. முன்னதாக, முஷாரப்பின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் தகவல் அமைச்சருமான ஃபவாத் சவுத்ரி, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் ஆதரவில் இருப்பதாகவும் கூறினார். 78 வயதான ஜெனரல் முஷாரப் 1999 முதல் 2008 வரை பாகிஸ்தானின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.
“வென்டிலேட்டரில் இருப்பதால் முஷாரப் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்” என்று சவுத்ரி பிடிஐயிடம் கூறினார். இம்ரான் கானின் அரசில் தகவல் அமைச்சராக இருந்த சவுத்ரி, ஒரு காலத்தில் முஷாரப்பின் ஊடக செய்தித் தொடர்பாளராக இருந்தார். முஷாரப்பின் மகனிடம் பேசியதாகவும், அவருக்கு நோய் இருப்பதை உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.
“நான் துபாயில் உள்ள ஜெனரல் முஷாரப்பின் மகன் பிலாலிடம் பேசினேன். அவர் (முஷாரப்) வென்டிலேட்டரில் இருப்பதை உறுதிப்படுத்தினார்” என்று சவுத்ரி கூறினார்.
முஷாரஃப் நிறுவிய அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (APML) ஓவர்சீஸ் தலைவர் இஃப்சால் சித்திக், அறிக்கைகளுக்கு பதிலளித்தார். முன்னாள் அதிபர் முஷாரஃப் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், ஆனால் முழுமையான கண்காணிப்பில் இருக்கிறார் என்று அவர் கூறினார். “ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் வீட்டில் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், ஆனால் வழக்கம் போல் முழு விழிப்புடன் இருக்கிறார். தயவு செய்து போலி செய்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம். அவரது நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள், அமீன்” என்று சித்திக் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில் முஷாரப் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அதிபரான முஷாரஃப், 2016 முதல் துபாயில் வசித்து வருகிறார். அவர் 2007 இல் அரசியலமைப்பை இடைநிறுத்தியதற்காக தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டார். முன்னாள் இராணுவ தலைவரான முஷாரஃப் மார்ச் 2016 இல் மருத்துவ சிகிச்சைக்காக துபாய்க்குச் சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பவில்லை.
மேலும் படிக்க | ஆப்கான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி எடுத்து சென்ற பணம் எவ்வளவு தெரியுமா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR