புதுச்சேரி: நகராட்சிக்கு சொந்தமாக உள்ள இடத்திலுள்ள பாப்ஸ்கோ கிடங்கில் துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரையடுத்து திமுக எம்எல்ஏக்கள் திறந்து பார்த்தபோது பல டன் அரிசி மக்கி வீணானது தெரியவந்தது.
புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ அங்காடி உள்ளது. அதை குடோனாக பாப்ஸ்கோ செயல்படுத்துகிறார்கள். கீழ் பகுதியில் உள்ள இரண்டு கடைகளில், துர்நாற்றம் வீசத்தொடங்கியது. அதையடுத்து தொகுதி எம்எல்ஏ சம்பத்திடம் தெரிவித்தனர். அவரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவாவும் அங்கு வந்து, பாப்ஸ்கோ குடோனை திறந்து பார்த்தனர்.