புனரமைக்கப்பட்ட இரத்தினபுரி மாநகரசபை வளாகம் நேற்று (09) பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இரத்தினபுரி மாநகர சபை கட்டிடம் 40 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் முழு வசதியுடன் கூடிய அரங்கம், மாநாட்டு அறை, கேட்போர் கூடம், அலுவலக வளாகம் மற்றும் தீயணைக்கும் பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுநர் பண்டார டிக்கிரி கொப்பேகடுவ, முன்னாள் மாகாண அமைச்சர் ரஞ்சித், இரத்தினபுரி மாநகர சபை மேயர் டைரோன் அத்தநாயக்க, சப்ரகமுவ பிரதம செயலாளர் சுனில் ஜயலத், ஆளுநர் அலுவலக செயலாளர் மஞ்சுள இடிவெல ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1957 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி இந்த நிறுவன வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1959 இல் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.