உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடான சீனாவில், தற்போது மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும் வியப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்தடையை கட்டாயமாக அமல்படுத்திய அந்த நாடு தற்போது இளம் வயதிலேயே திருமணம் செய்துக்கொண்டு 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வற்புறுத்துகிறது.
ஆனால் ஏற்கனவே கொரோனா தொற்று, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றால் மனம் வெறுத்து போயுள்ள சீன மக்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருமண எண்ணிக்கையில் கடும் சரிவு, தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் சீனாவில் தற்போது இந்த தலைக்கீழ் நிலைமை ஏற்பட்டுள்ளது.