தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 2 பேர் சரக்கு ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களான மாரிமுத்து என்னும் ஒரே பெயருடைய 2 பேர், ஜெபசிங் என்ற மற்றொரு நண்பருடன் சேர்ந்து நேற்றிரவு திருமண வீட்டில் மது அருந்திவிட்டு மூன்றாவது மைல் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கியதாக கூறப்படுகிறது.
அதிகாலை அவ்வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஒருவர் தலை துண்டித்தும், ஒருவர் உடல் நசுங்கியும் உயிரிழந்ததாக உடனிருந்த ஜெபசிங் போலீசில் தெரிவித்துள்ளார்.
தான் தண்டவாளத்தின் நடுவே படுத்திருந்ததால் காயங்களுடன் தப்பியதாக ஜெபசிங் கூறியதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், இருவரும் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.