மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சுந்தர் பிச்சை அவர்கள் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது வெற்றிப் பயணம் குறித்து தற்போது பார்ப்போம்.
Alphabet Inc மற்றும் அதன் துணை நிறுவனமான Google ஆகிய நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டின் கோவில் நகரமான மதுரையில் 1972ஆம் ஆண்டு பிறந்த இவரது வெற்றிப்பயணம் ஒவ்வொரு இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
தி கிரேட் ரெசிக்னேஷன் தொடரும்.. இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 86% ஊழியர்கள் ராஜினாமா செய்யலாம்!
சுந்தர் பிச்சை காராக்பூர் ஐஐடியில் உலோகவியல் பொறியியலில் பட்டம் பெற்றார் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்கில் எம்.எஸ் படிக்க அமெரிக்கா சென்றார். பின்னர் அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பெற்றார்.
சுந்தர் பிச்சை
2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த பிச்சை, 2015ல் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஆனாலும் அவரது பயணம் எளிதானது அல்ல.
குழந்தை பருவம்
நியூயார்க் டைம்ஸ் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தனது குழந்தைப் பருவத்தை பற்றியும், அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் குறித்தும் மனம் திறந்து கூறியுள்ளார். ‘எங்கள் வீட்டில் ஒரே ஒரு அறை தான் இருந்தது. அந்த அறையில் நாங்கள் தரையில் தான் தூங்குவோம். நான் வளரும்போது குடும்பத்தில் கடுமையான வறுமை இருந்தது, அதனால் எங்களுக்கு கவலை இருந்தது என்று கூறியிருந்தார்.
சுந்தர் பிச்சை தந்தை
சுந்தர் பிச்சையின் தந்தை பிரிட்டிஷ் நிறுவனத்தில் மின் பொறியாளராக இருந்தார். பிச்சையின் தந்தையும் மின்சார உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை வைத்திருந்தார்.
வெளிநாட்டு படிப்பு
வெளிநாட்டிற்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, சுந்தர் பிச்சை மெக்கின்சி & கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அப்ளைடு மெட்டீரியல்ஸ் மற்றும் மேலாண்மை ஆலோசனையில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மையில் பணியாற்றினார்.
கூகுள்
அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு, அவர் கூகுளில் சேர்ந்தார், அங்கு அவர் குரோம் வெற்றிக்காக பெரும் புகழ் பெற்றார். குரோம் மற்றும் குரோம் ஓஎஸ் போன்ற கூகுளின் மென்பொருள் தயாரிப்புகளின் தொகுப்பிற்கு தலைமை தாங்கினார். கூகுள் டிரைவிற்கும் அவர்தான் முக்கியப் பொறுப்பு என்ற நிலை அவரை மேலும் முன்னேற்றத்தை காண வைத்தது.
ஜிமெயில்
ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் உட்பட பல புதிய தயாரிப்புகளை அவர் மேற்பார்வையிட்டார். 2013 ஆம் ஆண்டில், பிச்சை தான் நிர்வகிக்கும் கூகுள் தயாரிப்புகளின் வளர்ந்து வரும் பட்டியலில் ஆண்ட்ராய்டை சேர்த்தார்.
மைக்ரோசாப்ட்
2014ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு பிச்சையும் ஒரு வலுவான போட்டியாளராக இருந்தார் என்பது அனைவருக்கும் ஒரு ஆச்சரியமான தகவல் ஆகும். அந்த பதவி சத்யா நாதெல்லாவுக்கு கிடைத்தது. டிசம்பர் 2019ஆம் ஆண்டு சுந்தர்பிச்சை Alphabet Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆனார்.
பெண்களுக்கு சமத்துவம்
கூகுளில் இணைந்த பிறகு, ஆகஸ்ட் 2017ஆம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களின் விருப்பத்தேர்வுகள் மற்றும் திறன்களின் விநியோகம் உயிரியல் ரீதியாக வேறுபடுகிறது” என்று வாதிட்டு கூகுளின் பன்முகத்தன்மைக் கொள்கைகளைக் குறைகூறி, பத்து பக்க அறிக்கையை எழுதிய ஒரு பணியாளரை பணிநீக்கம் செய்தார். இதனால் சுந்தர் பிச்சை பெண்கள் மத்தியில் பிரபலமானார். தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்களின் சமமான பிரதிநிதித்துவத்தை நாம் ஏன் காணவில்லை என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலையும் அவரே தந்தார்.
பாலின நிலைபாடு
10 பக்க குறிப்பேடு “எங்கள் நடத்தை விதிகளை மீறுவதாகவும், தீங்கு விளைவிக்கும் பாலின நிலைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் எல்லை மீறுவதாகவும் உள்ளது என்ற சுந்தர் பிச்சையின் வாதம் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டது. “பயனர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதே எங்கள் பணியாகும். எங்கள் சக ஊழியர்களின் ஒரு குழுவினர் அந்த வேலைக்கு உயிரியல் ரீதியாக பொருந்தாத பண்புகளைக் கொண்டிருப்பதாக பரிந்துரைப்பது புண்படுத்தும்’ என்று பிச்சை வெளியிட்ட அறிக்கை உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பத்மபூஷன்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sundar Pichai turns 50: From Madurai to becoming CEO of Google, a inspiring journey
Sundar Pichai turns 50: From Madurai to becoming CEO of Google, a inspiring journey | மதுரை முதல் கூகுள் வரை: பிறந்த நாள் கொண்டாடும் சுந்தர் பிச்சையின் வெற்றிப்பயணம்