சியோல்:தென் கொரியாவில், நீதிமன்றம் அருகே அலுவலக கட்டடம் ஒன்றில் மர்ம நபர் வைத்த தீயில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். கிழக்காசிய நாடான தென் கொரியாவின் டேகு நகரில், மாவட்ட நீதிமன்ற கட்டடத்துக்கு அருகில், ஏழு மாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு, வழக்கறிஞர்கள் உட்பட பலர் அலுவலகங்கள் வைத்திருந்தனர். இதன் இரண்டாவது தளத்துக்கு நேற்று காலை சிறு சிலிண்டருடன் வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த ஒரு அலுவலகத்துக்கு தீ வைத்தார்.
அது மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியது.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருந்தும், தீயில் சிக்கி ஏழு பேர் உடல் கருகி இறந்தனர். காயம் அடைந்த 41 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இறந்தவர்களில், கட்டடத்துக்கு தீ வைத்த அடையாளம் தெரியாத நபர் உடலும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சியோல்:தென் கொரியாவில், நீதிமன்றம் அருகே அலுவலக கட்டடம் ஒன்றில் மர்ம நபர் வைத்த தீயில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர்.கிழக்காசிய நாடான தென் கொரியாவின் டேகு நகரில், மாவட்ட நீதிமன்ற
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.