ரூ.10,000 கோடி நிதி திரட்ட திட்டமிடும் யெஸ் வங்கி: முயற்சி பலிக்குமா?

யெஸ் வங்கி ரூ.10,000 கோடி நிதி திரட்ட தேவையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அந்த நடவடிக்கைக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யெஸ் வங்கியின் தலைவர் சுனில் மேத்தா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் வங்கியின் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.10,000 கோடி திரட்டுவதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!

செப்டம்பர் மாதத்திற்குள் இந்த நிதியை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த நிதி திரட்டுவதற்காக வங்கியின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யெஸ் வங்கி

யெஸ் வங்கி

கடந்த 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய பொது வெளியீடுகளில் ரூபாய் 15,000 கோடி வரை நிதி மூலதனத்தை யெஸ் வங்கி திரட்டியது. இதன் காரணமாக புணரமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் முக்கிய மைல்கற்களை யெஸ் வங்கி எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வாரியம்

புதிய வாரியம்

யெஸ் வங்கியின் மிகப்பெரிய பங்குதாரரான எஸ்பிஐ இடமிருந்து தரப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் தற்போது புதிய வாரியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் முன்னேற்றம் தற்போது அபரிதமாக இருப்பதாகவும் எதிர்பார்த்ததைவிட அதிக முன்னேற்றம் இருக்கிறது என்றும் கூறிய சுனில் மேத்தா, கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள் வங்கியின் கடினமான காலகட்டம் என்றும் இருப்பினும் எங்களது 24,000 ஊழியர்கள் வங்கியை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லும் சவாலான பணியை செய்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பான செயல்பாடு
 

சிறப்பான செயல்பாடு

வங்கியை மீட்டெடுப்பதில் குறிப்பாக கோவிட் சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய நிலையிலும் எங்கள் வங்கி சிறப்பாக செயல்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்கியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுத்து முன்னேறி வருகிறோம் என்றும் அனைத்து பிரச்சினைகளையும் உறுதியுடன் கையாள்வதில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வங்கியின் மீது நம்பிக்கையை கொண்டுவருவதற்கு கொண்டு வருவதற்கு ஒவ்வொரு பங்குதாரர்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கும் நேர்மறையான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுனில் மேத்தா

சுனில் மேத்தா

இந்த நிலையில் தற்போது உள்ள நிலையிலில் வங்கி தனது நிலையை மேம்படுத்துவதற்காக, இயல்பான முன்னேற்றத்திற்கு செல்ல வேண்டும் என்றும் போட்டிகள் நிறைந்த இந்த உலகில் சந்தையில் வங்கியை மேம்படுத்த வேகமாக இயங்க வேண்டும் என்றும் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் தொடர்பான அம்சங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக உள்ளது என்றும் சுனில் மேத்தா தெரிவித்துள்ளார்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

தற்போது ஊழியர்களுக்கு வங்கி குறித்து தன்னம்பிக்கை வந்துள்ளதாகவும் அது அவர்களுக்கு ஒரு உந்துதலாக உள்ளது என்றும் சந்தையில் உள்ள திறமையானவர்களை ஈர்க்க தொடங்கியுள்ளதாகவும் நல்ல தரமான நபர்கள் வங்கியில் சேர்வதற்கான பெரும் ஊக்கம் அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரூ.1066 கோடி லாபம்

ரூ.1066 கோடி லாபம்

FY22 இல் வங்கியின் முழு ஆண்டு லாபம் ரூ.1,066 கோடி என்று யெஸ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் 2020 மற்றும் 21ம் நிதியாண்டில் வங்கி பெரும் இழப்பை சந்தித்த நிலையில் தற்போது அபாரமாக செயல்பட்டு மீண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

‘Yes Bank board in talks to raise ₹10,000 crore’

‘Yes Bank board in talks to raise ₹10,000 crore’ | ரூ.10,000 கோடி நிதி திரட்ட திட்டமிடும் யெஸ் வங்கி: முயற்சி பலிக்குமா?

Story first published: Friday, June 10, 2022, 9:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.