வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 23 ஆம் தேதியில் இருந்து சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என தெரிவித்துள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், விதி மீறலில் ஈடுபடுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.