பெங்களூரில் சிக்னலில் நிற்காமல் விதியை மீறித் தாண்டிச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் மகளின் காரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
விதியை மீறிச் சென்ற BMW காரைத் தடுத்து நிறுத்தியபோது அதிலிருந்து இறங்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் நிம்பாவளியின் மகள், போக்குவரத்துக் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
காவல்துறையினர் உரிய ஆதாரத்துடன் கூறியதை அடுத்து எம்எல்ஏ மகளுடன் காரில் வந்தவர் பத்தாயிரம் ரூபாய் அபராதத்தைச் செலுத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து காரில் சென்றனர்.