வியட்நாம் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள தொலைத்தொடர்புப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார்.
வியட்நாம் ராணுவத்தில் பணியாற்றுவோருக்குத் தொலைத்தொடர்புப் பயிற்சி அளிப்பதற்காக நா டிராங் என்னுமிடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்ட ராஜ்நாத் சிங், பயிற்சிக்கான கருவிகள் வாங்க இந்தியாவின் உதவியாக 50 இலட்ச ரூபாய்க்கான யை வழங்கினார்.
முன்னதாக விமானப்படை அதிகாரிகள் பயிற்சிப் பள்ளிக்கு 10 இலட்சம் டாலர் நிதியுதவியையும் ராஜ்நாத் சிங் வழங்கினார்.