திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காலணி அணிந்து நடமாடதடை விதிக்கப்பட்டுள்ளநிலையில், நடிகை நயன்தாரா காலணயுடன் அங்கு நடந்து சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநரும் தனது நீ்ண்டநாள் காதலருமான விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹேட்டலில் நபெற்ற இந்த திருமண திரைத்துறையின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டு மணமகக்ளை வாழ்த்தினர்.
நேற்று திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து புதுமண தம்பதியான விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் திருப்பத கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளனர். பொதுவாக திருப்பதி மலையில், சினிமா சீரியல் படப்பிடிப்பு நடத்துவது, வெட்டிங் சூட் உள்ளிட்ட செயல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தடை உத்தரவை மீறி விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும், யாரும எதிர்பார்க்காத வகையில திருப்பதி மலைக்கோவிலில், கோஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். கோவிலின் முன் உள்ள மாடவிதி,லட்டு கவுண்டர்கள், கோவில் திருக்குளம் உள்ளிட்ட புகுதிகளில் போட்டோஷூட்டத்திய நிலையில். இந்த பகுதிகளில் நயன்தாரா காலில் காலிணி அணிந்து சென்றுள்ளார்.
ஆனால் காலணிகளுடன் நடமாட தடை விதிக்கப்பட்ட பகுதியான ஏழுமலையான் கோவில் முன்பகுதியில் நயன்தாரா காலணியுடன் சென்று போஸ்ட் வெட்டிங் ஷூட்டில் கலந்து கொண்டார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நடிகை நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.