40 வருட உச்சத்தில் அமெரிக்க பணவீக்கம்.. அப்போ இந்தியா நிலைமை என்ன..?!

அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் மே மாதத்தில் 8.6% விகிதத்தை எட்டியது, இது 40 ஆண்டு கால உச்சமாகும்.

அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் பணவீக்கம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 40 வருட உச்சத்தை தொட்டு உள்ளது.

இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் கட்டாயம் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நுகர்வோர் விலைக் குறியீடு

அமெரிக்க தொழிலாளர் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நுகர்வோர் விலைக் குறியீடு மே மாதத்தில் 8.6% அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. டிசம்பர் 1981 க்குப் பின் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

விலைவாசி

விலைவாசி

அமெரிக்க சந்தையில் அந்நாட்டு மக்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு எவ்வளவு செய்கிறார்கள் என்பதை அடிப்படையாக கொண்டு CPI அளவிடப்படுகிறது. மேலும் இந்த அளவீட்டை கடந்த ஆண்டு இதே மே மாத விலையுடன் ஒப்பிடப்பட்டு கணக்கிடப்படுகிறது.

எரிபொருள் விலை
 

எரிபொருள் விலை

மே மாதத்தின் பணவீக்க அதிகரிப்புக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிகப்படியான உயர்வு தான். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மே 2022ல் எரிபொருள் விலை சுமார் 34.6% உயர்ந்துள்ளது

மளிகைப் பொருட்கள்

மளிகைப் பொருட்கள்

இதேபோல்ல மளிகைப் பொருட்கள் 11.9 சதவீதமும், பயன்படுத்திய கார்கள் மற்றும் டிரக்குகளின் விலைகள் ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதத்தில் 1.8% உயர்ந்து, மூன்று மாத சரிவை மொத்தமாக விழுங்கியது.

 கோவிட்-19

கோவிட்-19

அமெரிக்காவின் வலுவான பொருளாதார வளர்ச்சியை பணவீக்கத்தின் உயர்வு கடுமையாக பாதித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்கொள்ள அரசின் சலுகைகளும், குறைவான வட்டி விகிதமும் பணவீக்கம் உயர்வுக்கு காரணமாக இருந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

USA Inflation Hit 8.6% in May; Unexpectedly hits to 40-Year High

USA Inflation Hit 8.6% in May; Unexpectedly hits to 40-Year High 40 வருட உச்சத்தில் அமெரிக்க பணவீக்கம்..!

Story first published: Friday, June 10, 2022, 21:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.