7.7 பில்லியன் டாலர்: ஐபிஎல் உரிமைக்காக மோதும் முகேஷ் அம்பானி – ஜெஃப் பிஜோஸ்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை பெறுவதற்காக உலகின் மிகப்பெரிய இரண்டு பணக்காரர்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி மற்றும் அமேசானின் நிறுவனர் ஜெஃப் பிஜோஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றுவதற்காக சுமார் 10 நிறுவனங்கள் வரை போட்டி போடுவதாக பார்த்தோம். தற்போது அமேசான் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே கடும் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தி கிரேட் ரெசிக்னேஷன் தொடரும்.. இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 86% ஊழியர்கள் ராஜினாமா செய்யலாம்!

கோடிக்கணக்கில் பணம் கொட்டும் விளையாட்டுக்களில் ஒன்றான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை உலகம் முழுவதும் சுமார் 60 கோடிக்கும் அதிகமானோர் பார்க்கின்றனர் என்பதால் இந்த போட்டியின் ஒளிபரப்பு உரிமையை வாங்குவதற்கு இந்த இரண்டு கோடீஸ்வரர்கள் கடும் போட்டியில் உள்ளனர்.

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை

டிஸ்னி ஹாட்ஸ்டார், சோனி என்டர்டைன்மென்ட், கூகுள், ஆப்பிள் உள்பட ஒரு சில நிறுவனங்கள் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைyஐ பெற விருப்ப மனுக்கள் அளித்திருந்தாலும் அம்பானி – அமேசான் இடையே தான் கடும் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

10 நிறுவனங்கள்

10 நிறுவனங்கள்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் பங்கேற்க இதுவரை 10 நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தலா 29.50 லட்ச ரூபாய் கட்டணத்தை செலுத்தி உள்ளன என்பதும் இந்த தொகை திருப்பி தரப்படாத ஏலத்தில் பங்கேற்பதற்கான கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.

4 பிரிவுகள்
 

4 பிரிவுகள்

2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை நான்கு பிரிவுகளாக பிரித்து வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது, ஆசிய துணை கண்டத்தில் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் அல்லாத ஒளிபரப்பு உரிமை மற்றும் உலக நாடுகளுக்கான உரிமை என 4 பிரிவுகளில் வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ஜூன் 12ஆம் தேதி இந்த ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடைபெறும் நிலையில் இந்த ஏலத்தை முகேஷ் அம்பானி, ஜெஃப் பிஜோஸ் ஆகிய இரண்டு கோடீஸ்வரர்களில் ஒருவருக்கு கிடைக்கஅதிக வாய்ப்பு இருப்பதாக ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஒளிபரப்பு உரிமையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காக 21 ஃபாக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த அனில் ஜெயராஜ் மற்றும் குல்சன் வர்மா ஆகிய இருவரையும் அம்பானி நியமனம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

7.7 பில்லியன் டாலர்

7.7 பில்லியன் டாலர்

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் உரிமைக்கு சுமார் 7.7 பில்லியன் அமெரிக்க டாலர் என தொகையை பிசிசிஐ நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-2022ஆம் ஆண்டுகால ஒளிபரப்பு உரிமம் தொகையிலிருந்து இது மூன்று மடங்கு கூடுதல் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமேசான்

அமேசான்

இதுவரை பல கால்பந்து போட்டிகளுக்கான உரிமத்தை அமேசான் நிறுவனம் வாங்கி உள்ளது என்பதும் ஒரு சில கால்பந்து போட்டிகளின் உரிமைகள் அந்நிறுவனத்திடம் 2033 ஆம் ஆண்டு வரை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கிரிக்கெட்டிலும் கால் வைக்க விரும்பும் அமேசான் நிறுவனத்தின் எண்ணம் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிஸ்னி ஹாட்ஸ்டார்

டிஸ்னி ஹாட்ஸ்டார்

அதேபோல் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனமும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பிய அனுபவம் உண்டு என்பதால் அந்த நிறுவனமும் இந்த இரு பணக்காரர்களிடம் போட்டி போடுகிறது. கோடிக்கணக்கில் பணம் கொட்டும் இந்த ஒளிபரப்பு உரிமை யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Jeff Bezos, Mukesh Ambani set to battle over $7.7 bn IPL broadcast rights

Jeff Bezos, Mukesh Ambani set to battle over $7.7 bn IPL broadcast rights | 7.7 பில்லியன் டாலர்: ஐபிஎல் உரிமைக்காக மோதும் முகேஷ் அம்பானி – ஜெஃப் பிஜோஸ்

Story first published: Friday, June 10, 2022, 9:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.