அகமதாபாத்: அகமதாபாத்தில் இஸ்ரோவின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். அத்துடன் நவ்சாரி பகுதியில் ஏ.எம்.நாயக் சுகாதார வளாகம், நிராலி பன்னோக்கு மருத்துவமனையையும் பிரதமர் திறந்துவைத்தார்.
அங்கு அவர் பேசும்போது, ‘‘ஏழைகளின் நலன் கருதி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் குஜராத்தில் மட்டும் 41 லட்சம் பேர் பலன் பெற்றுள்ளனர். குஜராத்தில் மருத்துவ படிப்புக்கான இடங்கள் 1,100-ல் இருந்து 6,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 30-ஐ தாண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் சுகாதாரத் துறை புதிய மைல் கல்லை எட்டியுள்ளது’’ என்றார்.