ஆவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மூன்று டி-20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட கிரிக்கெட் தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆவுஸ்திரேலிய அணி, இன்று தனது மூன்றாவது டி-20 போட்டியை பல்லேகலவில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் விளையாடியது.
இரவு 7மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Wow… What a match.. especially the last three overs… Something for the crowd to joy for.. terrific atmosphere and what an ending.. 59 runs of 17 balls scores. Dasun Shanaka you beauty. #SLVSAUS pic.twitter.com/uUvqUMGa4E
— Pratik SATISH (@Tweeterati_hoon) June 11, 2022
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஆவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை குவித்தது.
ஆவுஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக வார்னர் 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் விளாசி 39 ஓட்டங்கள் குவித்து இருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை தீக்ஷனா மொத்தம் நான்கு ஓவர்கள் பந்துவீசி 25 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் 177 ஓட்டங்கள் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
இருப்பினும் ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் 50 ஓட்டங்களுக்கும் அதிகான ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இறங்கிய இலங்கை கேப்டன் தசுன் ஷனக, வெறும் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என விளாசி 54 ஓட்டங்களை சேர்த்தார்.
இதனால் இலங்கை அணி 19.5 ஓவர்கள் மூடிவில் வெற்றி இலக்கான 177 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில், முதல் இரண்டு போட்டிகளை வெற்றி பெற்று ஆவுஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி இருப்பினும் மூன்றாவது டி-20 போட்டியில் இலங்கை அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்கு எதிரான முதலடி…உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்க தயாரான நாடு!
மேலும் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை வீரர் தசுன் ஷனகவும், தொடரின் நாயகனாக ஆவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் தெர்வுசெய்யப்பட்டுள்ளனர்.