இது பெண்ணா இல்ல பதுமையா? – யார் இந்த இன்ஸ்டா ஃபேமஸ் கியாரா?

இணைய உலகம் இனி வரும் காலங்களில் மெய்நிகராக உருமாறும் என்பதால் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமாக Metaverse இருக்கும் என மார்க் ஸக்கர்பெர்க் கடந்த ஆண்டு அறிவித்தார்.
டிஜிட்டல் பயன்பாடு உலகளவில் உச்சத்தில் இருக்கும் நிலையில அதன் அடுத்த பரிணாமமாக இந்த மெட்டாவெர்ஸ் இருக்கும் எனவும் கூறப்பட்டது. Zoom, Google Meet போன்று விர்ச்சுவலாக (மெய் நிகர்) ஒருவரை சந்தித்து பேசக்கூடிய வகையில் மெட்டா வெர்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆன்லைன் வகுப்புகள், திருமணங்கள் , ஆபிஸ் மீட்டிங் என பலவற்றையும் நடத்திக்கொள்ளும் வசதி உள்ளது.
மெட்டாவெர்ஸ் என்றால் என்ன? ஃபேஸ்புக் இத்தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய என்ன காரணம்?
அந்த வகையில் ஆசியாவிலேயே முதல் முறையாக மெட்டா வெர்ஸ் மூலம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஐஐடி ஆராய்ச்சி படிப்பு மாணவர் தனது திருமணத்தையே நடத்தியிருந்தார். அது பெருமளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயனர்கள் இன்ஃப்ளுயன்சர்களாக இருப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதில் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரு படி மேல் சென்று தன்னை மெட்டாவெர்ஸ் பயனராக அறிமுகப்படுத்தி பதிவுகளையும் இன்ஸ்டாவில் இட்டு வருகிறார்.
Kyra என்ற பெயரில் செயல்பட்டு வரும் இவர்தான் இந்தியாவின் முதல் மெட்டாவெர்ஸ் இன்ஃப்ளூயன்சராக அறியப்படுகிறார். தற்போது இவருக்கு 1 லட்சத்துக்கும் மேலான ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.
image
மெட்டா இன்ஃப்ளூயன்சரான Kyra கடந்த டிசம்பர் 2021ல் அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஜனவரி 28 2022ல் பிறந்ததாக அறியப்படுகிறார். தற்போது இவர் ட்விட்டரிலும் தனக்கென அக்கவுண்ட் வைத்திருக்கிறார்.
மேலும் இவரது கணக்குகளை பராமரிக்கவே தனியாக ஒரு டீம் செயல்பட்டு வருகிறது. இன்ஸ்டாவில் ஒரு லட்சம் ஃபாலோவர்ஸை எட்டியதை அடுத்து பதுமை போன்றிருக்கும் தன்னுடைய ஃபோட்டோவை ஷேர் செய்த கியாரா “இந்த அளவுக்கு எனக்கு வரவேற்பு இருக்கும் என நான் நினைக்கவில்லை. கடந்த 5 மாதங்களும் எனக்கு குழப்பமாகவும், அழகாகவும்தான் இருந்தது. இந்த பயணத்தில் இணைந்தவர்களுக்கு என்னுடைய நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை 10 ஆயிரத்துக்கும் மேலானோர் லைக் செய்ததோடு, உண்மையான உலகத்துக்கு வரவேற்கிறோம் என பயனர் ஒருவரும் பதிவிட்டிருக்கிறார். இதுபோக நீங்கள் ரோபோவா இல்ல மனிதரா? என கேள்வியும் எழுப்பியிருக்கிறார்கள்.
ALSO READ: 
ஃபேஸ்புக் தாய் நிறுவனம் இனி மெட்டா என அழைக்கப்படும் – மார்க் ஜூக்கர்பெர்க்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.