இந்தியாவின் கடன் உதவியின் கீழ் கிடைக்கும் இறுதியான எரிபொருள் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர்களை எதிர்பார்க்கும் இலங்கை
இதன் பின்னர் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர்களை எரிபொருளுக்கான கடனுதவியாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம்
இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கின்றனர்.
அதேவேளை 20 நாட்களுக்கு முன்னர் வந்த கழிவு எண்ணெய் கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த பணம் இல்லை என்பதால், கப்பல் தொடர்ந்தும் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளது.