இந்த விளம்பரங்களுக்கு தடை.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு..!

இந்திய நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் பொருட்களின் விளம்பரத்தில் பல மாற்றங்களையும், கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்துவரும் நிலையில் வெள்ளிக்கிழமை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு விளம்பர துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடைமுறைக்கு சாத்தியமில்லாத விளம்பரங்கள்: Edtech நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அரசு!

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

மத்திய அரசு தவறான விளம்பரங்கள் மக்கள் பார்வைக்கு வருவதைத் தடுக்கப் புதிய விதிமுறைகளையும், ஆதரவு அளிக்கும் வாடகை விளம்பரங்களைத் தடை செய்யவும், டிஸ்கவுன்ட் மற்றும் இலவச அறிவிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விளம்பரங்களுக்குக் கடுமையான விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

இதேபோல் மத்திய அரசு வெளியிட்டுள்ள Prevention of Misleading Advertisements and Endorsements for Misleading Advertisements, 2022 என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புதிய விளம்பர விதிமுறைகளில் குழந்தைகளை டார்கெட் செய்யப்படும் விளம்பரங்களும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

நுகர்வோர் விவகார அமைச்சகம்
 

நுகர்வோர் விவகார அமைச்சகம்

மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விளம்பரங்களில் ஒப்புதல் அளிக்கும் போது புதிய விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அபராதம்

அபராதம்

மேலும் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் கீழ் புதிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10 லட்சம் அபராதமும், தொடர்ந்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விதிமுறைகள் பிரின்ட், டிவி மற்றும் ஆன்லைன் என அனைத்திற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிரூபணம்

நிரூபணம்

ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் போதுமான ஆதாரங்கள் உடன் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாமல் அளவுக்கு மீறி தங்களது தயாரிப்பு அல்லது சேவையின் பலன்களைப் பெரிதாகக் காட்டக் கூடாது.

குழந்தைகள்

குழந்தைகள்

மேலும் குழந்தைகள் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதற்கும், எந்தவொரு உடல்நலம் அல்லது ஊட்டச்சத்து நன்மைகளைப் பெறுவதற்கும் வழிவகுக்கும் வகையில் தயாரிப்பு அல்லது சேவையின் அம்சங்களைப் பெரிதுபடுத்துவதும் விளம்பரங்களை இப்புதிய விதிமுறை தடுக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi Govt issues new guidelines to curb misleading ads; bans surrogate ads

Modi Govt issues new guidelines to curb misleading ads; bans surrogate ads இந்த விளம்பரங்களுக்குத் தடை.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.