வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனா -ரஷ்யா நாடுகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட புதிய பாலம் பொது போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
ரஷ்ய- சீனா நாடுகளுக்கு இடையே ஆமூர் என்ற நதி குறுக்கே சீன -ரஷ்யா நாடுகளிடையே பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் 2014-ல் கையெழுத்தானது. ரஷ்யாவின் பிலகோவேஷிசேன்ஸ்க் நகரையும், சீனாவின் வடக்கு மாகாணத்தில் ஹெய்ஹீ நகரயும் இணைக்கும் இப்பாலம் 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. பாலம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று கடந்த 2020 ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.2020ல் உலகை அச்சுறுத்திய கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.
இதற்கான நடைபெற்ற விழாவில் ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கேற்றார். சீன -ரஷ்ய நாடுகளின் அரசியல் , பொருளாதார முன்னேற்றங்களுக்கு இந்த பாலம் உதவிகரமாக இருக்கும் என்றார். உக்ரைன் மீது ரஷ்ய- போர் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில் இந்த பாலத்தின் பங்கு உலக நாடுகளால் பெரிதும் கவனிக்கப்பட்டு வருவதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Advertisement