இலங்கையில் முழுமையான மனிதாபிமான அவசரநிலை ஏற்படும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை


சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் சமகாலத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், முழுமையான மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தில் இலங்கை உள்ளதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் அதன் நாணய மதிப்பின் வீழ்ச்சிக்கு மத்தியில் இலங்கையில் வாழும் 22 மில்லியன் மக்கள் மிகக் கடுமையான நிதிக் நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர்.

அவசரநிலையாக உருவாகலாம் என்று கவலை

1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இது ஒரு முழுமையான மனிதாபிமான அவசரநிலையாக உருவாகலாம் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்” என்று ஐ.நா மனிதாபிமான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லேர்க் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற வழக்கமான ஐ.நா. செய்தி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முழுமையான மனிதாபிமான அவசரநிலை ஏற்படும் அபாயம் - ஐ.நா எச்சரிக்கை

47.2 மில்லியன் டொலர் உதவி

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 1.7 மில்லியன் மக்களுக்கு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 47.2 மில்லியன் டொலர் உதவியை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் முகவரான யுனிசெப்பின் இலங்கையின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், இலங்கையில் 70 வீதமான குடும்பங்கள் ஏற்கனவே உணவு நுகர்வைக் குறைத்துள்ளதாகவும், இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.