திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அன்றாடம் வரும் பல்லாயிரகணக்கான பக்தர்களுக்கு சீனிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.
சமீபத்தில் டோக்கனை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததையடுத்து, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததையடுத்தனர். இதனையடுத்து இலவச தரிசன் டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. \
இந்த நிலையில், இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த முக்கிய தகவலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலவச தரிசன டோக்கன்களை பெற முறையான வரிசைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகள் முடிந்து கோடை காலத்திற்குப் பின் இவவச தரிசன டிக்கெட் டோக்கன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆந்திர மாநிலம் முழுதும் தேவஸ்தானம் சார்பில் இலவச திருமணங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையிவ் தேவஸ்தான நிர்வாகம் இவ்வாறு கூறியுள்ளது.
ஏழுமலையானுக்கு நேற்று முன்தினம் சென்னையைச் சேர்ந்த பக்தை சரோஜா சூரியநாராயணன், 4.150 கிலோ எடையிலான 2.45 கோடி ரூபாய் மதிப்புடைய வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க பூணுால் மற்றும் காசுமாலையை நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.