ஈரோடு: கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஒசூர் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சேலம், ஒசூர் தனியார் மருத்துவமனைகளுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி விசாரணையை தொடங்கியுள்ளார்.