உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக தட்டி தூக்கும் பணியில் ரஷ்யா முழு மூச்சில் ஈடுபட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது.
நாட்டின் தலைநகரான கீவை ரஷ்யா கைப்பற்ற முடியாத நிலையில் மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
இந்நிலையில் தற்போது அந்த நாடு, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற முழு முழுவீச்சில் போரில் ஈடுபட்டுள்ளது.
REUTERS
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்யா வலுவாக இருப்பதாக நினைப்பதால் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.
நாங்கள் ரஷ்யாவை பலவீனப்படுத்த விரும்புகிறோம். உலகமும் அதைச்செய்ய வேண்டும்.
தற்போது டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களில் அந்நாட்டு துருப்புகள் தங்கியுள்ளனர்.
எப்படியிருந்தாலும் போர்க்களத்தில் செய்ய வேண்டிய பங்களிப்பை உக்ரைன் செய்து வருகிறது என கூறியுள்ளார்.
AP PHOTO