உத்தரப் பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களில் நேற்றைய கல்வீச்சு, தீவைப்பு வன்முறை தொடர்பாக 227 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறார்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டவர்களையும், வன்முறையில் ஈடுபட்டவர்களையும் வீடியோ பதிவில் அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜ் அடாலாவில் வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்ட ஜாவேத் அகமது என்பவனைக் கைது செய்துள்ளதாகக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வன்முறையாளர்கள் மீது 29 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளதாகவும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.