கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா விதித்து இருந்த தடைகளை நீக்கியதற்கு சர்வதேச நிதியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
உலகின் கோதுமை தேவையில் மூன்றில் ஒற்றை பங்கை பூர்த்தி செய்யும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் மோதல்களால், உலகளவில் கோதுமை தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருள்களின் விலை ஆகியவை அதிகரித்துள்ளது.
மேலும், உக்ரைன் ரஷ்யாவிற்கு அடுத்து மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளாரன இந்தியாவும் தனது உள்நாட்டு கோதுமை விலையேற்றதை கட்டுப்படுத்த அதன் ஏற்றுமதிக்கு முற்றிலுமாக கடந்த மாதம் தடைவிதித்தது.
இதையடுத்து உலகளவில் ஏற்பட்ட கடுமையான உணவு நெருக்கடியை தொடர்ந்து, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஐ.நா, சர்வதேச நிதியம் ஆகியவை கோதுமை ஏற்றுமதி தொடர்பான தடையை மறுபரிசீலனை செய்யும்படி இந்தியாவிற்கு கோரிக்கை முன்வைத்தனர்.
இந்தநிலையில், உலக நாடுகளின் தேவை மற்றும் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கான தடையை தளர்த்தியுள்ளது.
இதுத் தொடர்பாக சர்வதேச நிதியத்தின் செய்தி தொடர்பாளர் கெர்ரி ரைஸ் தெரிவித்த கருத்தில், கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா மீண்டும் அனுமதி வழங்கி இருப்பதை சர்வதேச நிதியம் வரவேற்பதாக தெரிவித்தார்.
அத்துடன் உணவுப் பொருட்கள் மற்றும் எரிப்பொருள் மீதான ஏற்றுமதிக்கு 30 நாடுகள் தடை விதித்துள்ளன, இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா மற்றும் முதன்மை துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உலகின் பிரபல பாடகருக்கு நேர்ந்த பரிதாபம்: சோகத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள்!
மேலும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் உணவுப் பொருள்கள் மீதான தடையை தளர்த்த வேண்டும் என சர்வதேச நிதியம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.