பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தனது முகத்தின் ஒற்றைப் பகுதி செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
கனேடிய சூப்பர் ஸ்டாரான பிரபல இளம் பாடகர் ஜஸ்டின் பீபர் தன்னை அரிய வகை வைரஸ் தாக்கி இருப்பதாகவும், இதனால் தனது முதத்தின் பாதி பகுதிகள் தற்காலிகமாக செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்து, இன்ஸ்டாகிராமில் மூன்று நிமிட வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
28 வயதாகும் ஜஸ்டின் பீபர், ராம்சே ஹன்ட் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார், இந்த வைரஸானது அவரது முக நரம்புகளை தாக்கி ஒற்றைப் பக்க தசைகளை செயலிழக்க செய்துள்ளது.
Sending lots of love, light, & prayers to you @justinbieber ❤️ we love you so much! Please rest up, we are always here for you pic.twitter.com/45tiQ6HY1x
— Bieber Fever (@bieberfever) June 10, 2022
இந்தநிலையில், அவர் வெளியிட்ட விடியோவில், என்னுடைய முகத்தில் ராம்சே ஹன்ட் வைரஸ்கள் பாதிப்பை ஏற்பட்டுள்ளது, இதனால் எனது ஒற்றைப் பக்க காது மட்டும் முக தசைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் என்னுடைய முகத்தில் இந்த கண் இமைக்கவில்லை என்பதை உங்களால் பார்க்க முடியும், மற்றும் முகத்தின் இந்தப் பக்கத்தில் என்னால் சிரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் நான் இவ்வாறு இருக்ககூடாது என விரும்பிகிறேன், ஆனால் எனது உடல் என்னை மொதுவாக செயல்படுமாறு கூறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் தொடர்ந்து பேசிய ஜஸ்டின் பீபர், நான் சரியாகிவிடுவேன் என உறுதியுடன் இருப்பதாகவும், நீங்கள் இதனை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன், நான் இந்த நேரத்தை ஓய்வெடுக்க பயன்படுத்துவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் இயக்கத்தை மீண்டும் பெற முயற்சிப்பதற்காக முகப் பயிற்சிகள் செய்வதாகவும்,விரைவில் இதில் இருந்து குணமடைவேன் என்றும், ஆனால் இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது என்று தெரியவில்லை என்றும் ஜஸ்டின் பீபர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: மனித சடலங்களால் விஷமாக மாறிய நீர்நிலைகள்: ஆபத்தின் உச்சத்தில் இருக்கும் உக்ரைன் மக்கள்!
தற்போது ஜஸ்டின் பீபர் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் வட அமெரிக்காவில் நிகழ்ச்சிகளுக்காக குறிக்கப்பட்ட திகதிகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.