நியூயார்க் :ஐ.நா.,வின் தகவல்கள் மற்றும் செய்திகளை பல மொழிகளில் வெளியிடும் இந்தியாவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது. முதல் முறையாக இதில் ஹிந்தியும் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக, அராபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் உள்ளன. இதில், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச், பயன்பாட்டு மொழியாக உள்ளன.
இந்நிலையில், ஐ.நா.,வின் தகவல்கள் மற்றும் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், பல மொழிகளில் வெளியிடுவதற்கான தீர்மானத்தை இந்தியா தாக்கல் செய்திருந்தது. இந்த தீர்மானம் ஐ.நா., சபையில் நிறைவேறியுள்ளது. முதல் முறையாக இதில் ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வங்கம், உருது ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. ஐ.நா.,வின் இந்த நடவடிக்கையை பாராட்டுவதாக, ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ். திருமூர்த்தி குறிப்பிட்டுஉள்ளார்.
நியூயார்க் :ஐ.நா.,வின் தகவல்கள் மற்றும் செய்திகளை பல மொழிகளில் வெளியிடும் இந்தியாவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது. முதல் முறையாக இதில் ஹிந்தியும் இடம்பெற்றுள்ளது.ஐக்கிய நாடுகள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.