திருச்செந்தூர் அருகே, மகளை கிண்டல் செய்த நபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
எலெக்ட்ரீசியனான கண்ணன் என்பவர், தனது மனைவி, குழந்தைகளுடன் கரம்பவிளை பகுதியில் வசித்து வந்தார்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் 17 வயதான மகள் கடைக்கு செல்லும் போது அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகவும் அதைத் தட்டிக் கேட்ட சிறுமியின் தந்தை ராஜ் மற்றும் தாய் மாமா வடிவேலனை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ராஜ் போலீசில் புகாரளித்ததால், நேற்றிரவு கண்ணன் மதுபோதையில் ராஜின் வீட்டிற்கே சென்று தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜும் வடிவேலனும் கண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து ராஜை கைது செய்த போலீசார், தலைமறைவான வடிவேலனை தேடி வருகின்றனர்.