அரியலூர் அருகே கிணற்றில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தில் ரெங்கராஜன் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் ஒரு மூட்டை மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மிதந்த மூட்டையை மேலே எடுத்தனர்.
இதையடுத்து சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் ஒரு பெண் சடலம் அழுகிய நிலையில்இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண் நகைக்காக கொலை செய்து தனது தோழிகள் உதவியுடன் மூட்டையை கிணற்றில் போட்டது தெரியவந்தது.
இதனையடுத்து கரூரில் இருந்த செல்வியை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை நடைபெற்றது. என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM