கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டதையடுத்து, உலகம் முழுவதும் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக வழக்கமாக கொண்டுள்ளனர்.
தற்போது கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதையடுத்து, பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என்று சில நாடுகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள 38,600 கோடி ரூபாய் மதிப்பிலான முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கவசப் பொருட்கள் தரமற்றவை என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இந்த பொருட்களை தீயிட்டு எரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் எரிக்கப்படும் அந்த பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை கருவிகள் விற்பனை முறைகேடு: சுகாதாரத் துறை அமைச்சர் கைது!
அவசர கதியில் வாங்கப்பட்ட முகக்கவசம், கொரோனா தடுப்பு அங்கிகள் என 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம், , பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசின் செலவீனங்களை கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழு, இந்த விவகாரம் குறித்த விசாரணையை தொடங்கி உள்ளது.