சென்னை பிராட்வே பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றிடம் வழங்க அவகாசம் வழங்கியும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மாற்றிடம் வழங்க சென்னை மாநகராட்சி தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஜூன் 23ஆம் தேதிக்குள் மாற்றிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.