சிசிர ஜயக்கொடி சியபத மன்றத்தை கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் தொடர்பான அறிக்கைக்கு சட்டவாக்க நிலையியற் குழு திருத்தங்களுடன் (9) அனுமதி வழங்கியது.
இந்த சட்டமூலம் தொடர்பான அறிக்கை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதியன்று கல்வி அமைச்சரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதன்படி, குறித்த அறிக்கை சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு நேற்று முன்வைக்கப்பட்டதோடு இது குறித்து விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சட்டவாக்க நிலையியற் குழுவின் தவிசாளரும் பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இக்குழு கூடியதோடு, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமாக நியமனம் பெற்ற பின்னர் அவர் பங்கேற்கும் முதலாவது குழுவாகவும் இது அமைந்தது.
இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அஜித் ராஜபக்ஷ, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேர, கௌரவ பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ ஜயந்த வீரசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றதோடு சட்டவரைஞர் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் கல்வியமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.