ரஷ்யா-சீனாவுக்கு இடையிலான முதல் சாலைப் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
அமுர் ஆற்றின் குறுக்கே, 19 பில்லியன் ரூபிள் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் சுமார் 1கி.மீ. நீளத்தில் கிழக்கு ரஷ்ய நகரமான பிளாகோவெஷ்சென்ஸ்க்கை வடக்கு சீனாவின் ஹெய்ஹேவுடன் இணைக்கிறது.
இரு நாடுகளின் வண்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாலத்தில் வாணவேடிக்கை காட்சிக்கு நடுவில், இரு முனைகளிலில் இருந்தும் சரக்கு வாகனங்கள் பாலத்தை கடந்து சென்றன.