நீரிழிவு நோய் உள்ள மக்கள் அல்லது நீரிழிவு நோய்க்கு தொடக்க நிலையில் உள்ளவர்கள் கூட வாழைப்பழத்தை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று அடிக்கடி கூறப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். “ஆனால், ஒரு உணவியல் நிபுணராக, நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழங்களை சாப்பிடலாம் என்று என்னால் பாதுகாப்பாக சொல்ல முடியும். இருப்பினும், சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் உள்ளன, ”என்று சான்றளிக்கப்பட்ட மருத்துவ உணவியல் நிபுணர், விரிவுரையாளர், நீரிழிவு கல்வியாளர் மற்றும் நியூட்ரின் நிறுவனர் லக்ஷிதா ஜெயின் கூறியுள்ளார்.
மேலும் அவர் “பழுத்த வாழைப்பழங்கள் (மஞ்சள் நிறத்தில்) உரிக்க எளிதானதாகவும், சாப்பிடுவதற்கு மென்மையாகவும் இருக்கும் என்பதால், அவற்றை வழக்கமாக சாப்பிடுகிறோம். ஆனால், வாழைப்பழம் பசுமையானது, அதன் இயற்கை இனிப்பு குறைவாக இருக்கும் – இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
வாழைப்பழத்தை அதன் முதிர்ச்சிக்கு ஏற்ப 5 நிலைகளாகப் பிரிக்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த நிலையில் உள்ள வாழைப்பழம் சிறந்தது?
பச்சை வாழைப்பழங்கள் பாதுகாப்பானவை என்றாலும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் நோயாளிகள் மஞ்சள் வாழைப்பழங்களைக் கூட சாப்பிடலாம். ஆனால் வாழைப்பழத்தில் அவற்றின் தோற்றம் வாழைப்பழத்தில் உள்ள மாவுச்சத்து இயற்கையான சர்க்கரையாக மாற்றப்படுவதைக் குறிக்கிறது. இதனால் அவற்றை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்று நியூட்ரின் நிறுவனர் லக்ஷிதா ஜெயின் அறிவுறுத்தியுள்ளார்.
வாழைப்பழம் சாப்பிட சிறந்த வழி?
ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் முழுவதுமாக சாப்பிடுவது நல்லது. ஆனால் அதை புரதத்துடன் இணைப்பது சிறந்தது. எனவே, வாழைப்பழத்தை முளைகட்டிய பருப்புகள் அல்லது பனீருடன் சாப்பிடுங்கள். “வாழைப்பழத்தில் 51 கிளைசெமிக் குறியீடு உள்ளது, இது எல்லைக்கோடு குறைவாக உள்ளது, எனவே நிறைய பேர் அதை முற்றிலும் தவிர்க்கிறார்கள். ஆனால் மற்ற குறைந்த ஜிஐ மூலங்கள் அல்லது புரோட்டீன் மூலத்துடன் சேர்த்துக் கொண்டிருப்பது இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்யும், “என்று லக்ஷிதா ஜெயின் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், GI என்பது ஒரு உணவு எவ்வளவு விரைவாக உங்கள் இரத்த சர்க்கரையை (குளுக்கோஸ்) அதிகரிக்கச் செய்யும் என்பதற்கான அளவீடு ஆகும். குறைந்த ஜிஐ : 1 முதல் 55. நடுத்தர ஜிஐ : 56 முதல் 69. உயர் ஜிஐ : 70 மற்றும் அதற்கு மேல்.
யார், யார் தவிர்க்க வேண்டும்?
கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவுகள் அல்லது இரத்தச் சர்க்கரை அளவு 300mg/dl க்கும் அதிகமாக உள்ள நோயாளிகள், பொதுவாக பழங்களை உட்கொள்வது குறித்து தங்கள் உணவியல் நிபுணர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
இறுதியாக…
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழத்தை (பழுக்காத, அரிதாகவே பழுத்த) சேர்த்துக்கொள்ளலாம். இது சர்க்கரை அளவு, எலும்பு வலி, PMS அறிகுறிகள், தசைப்பிடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். “உங்கள் சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் அல்லது ஏற்ற இறக்கமாக இருந்தால், முதலில் உங்கள் உணவியல் நிபுணரைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று ஜெயின் பரிந்துரைத்துள்ளார்.