சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 2 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற திகிலூட்டும் கழுவன் திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.
சேவுகப்பெருமாள் ஐயனார் ஆலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில் உடல் முழுவதும் கருப்பு சாயம் பூசி, முகத்தை மறைக்கும் சடை முடி அலங்காரம், அரைஞான் கயிற்றில் சடைமுடி ஆடை, கோரமான முகத்துடன் திகிலூட்டும் தீவட்டியுடன் உலா வந்த கழுவனை இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டிப் பிடித்தனர்.