ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நெடுஞ்சாலைக்கு அருகே இன்று, சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை கண்டுபிடித்த பாதுகாப்புப்படையினர், பலத்த பாதுகாப்புடன் அதனை செயலிழக்க வைத்தனர்.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்தும் வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
பயங்கர சத்தத்துடன் அந்த வெடிகுண்டு வெடித்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.