பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சனத் ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தம்மிக்க பெரேரா சனத் ஜயசூரியவின் பெயரை தவறாக உச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனத் ஜயசூர்ய தான் சனத் ஜயசூர்ய என்று குறிப்பிட்டு காணொளி ஒன்றை இணையத்தில்
பதிவிட்டிருந்தார்.இந்நிலையிலேயே, தம்மிக்க பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
Just received a call from Mr. Dhammika Perera to apologize to me. I told it was just a slip of the tongue and not a fault of the brain. I wished him all the best for the daunting task ahead. Let’s consider the matter closed
— Sanath Jayasuriya (@Sanath07) June 11, 2022
கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை மறந்த தம்மிக்க பெரேரா
நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா சில தினங்களுக்கு முன்னர் கலந்துகொண்ட தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பேட்டி நிகழ்ச்சியின் ஒரு பகுதி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்த பேட்டியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தம்மிக்க பெரேராவுக்கு இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரின் பெயர்கள் மறந்து போயுள்ளது.
கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை அவர், சனத் குணதிலக்க அரவிந்த பெரேரா என தம்மிக்க பெரேரா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.